'உங்க வீட்ல எல்லாருக்கும் கொரோனா இருக்கு...' 'டாக்டரை அடித்து உதைத்த கொரோனா நோயாளிகள்...' மன ரீதியாக டிஸ்டர்ப் செய்ததால் ஆத்திரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக கூறிய மருத்துவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் துவாரகா பகுதியில் பிந்தாப்பூரில் கிளினிக்கில் நடத்தி வரும் மருத்துவரை கடந்த சனிக்கிழமை அன்று (20.06.2020) மர்ம கும்பல் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் மருத்துவமனையையும் தாக்கி துவம்சம் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம கும்பலால் தாக்கப்பட்டவர் டாக்டர் அவ்தார் ஹன்சா என அடையாளம் காணப்பட்டார்.
அடுத்தத்தக்கட்ட விசாரணையில், மருத்துவமனை இயங்கும் பகுதியில் இருக்கும் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் தந்தைக்கு கோவிட் 19 பாதிப்படைந்து, அவரை மருத்துவர் ஹன்சா பரிசோதித்துள்ளார். மேலும், வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த விஷயத்தை மருத்துவர் அங்கிருக்கும் அண்டை வீட்டாருக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் சொல்லியதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பாதிப்படைந்த வீட்டில் இருக்கும் மற்றவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிங் குடும்பத்தை சேர்ந்தோரை அப்பகுதி மக்கள், மன ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தான் மருத்துவரை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கூறிய மருத்துவர் ஹன்சா, 'உறவினர்களிடம் சொல்வது என் கடமை, நான் செய்ததெல்லாம் அவ்வளவுதான். நான் சிங் மற்றும் அவரது சகோதரர்களை அழைத்து அவர்களின் தந்தையின் மரணம் குறித்து அவர்களிடம் கூறி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டேன்' என்று கூறினார்.
அடுத்தகட்டமாக கிரிமினல் மிரட்டல், அத்துமீறல் மற்றும் வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சுக்ஜீந்தர் சிங் மற்றும் ஜீதெந்தர் சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம் மேலும் இது குறித்து விசாரனையும் நடத்தி வருகிறோம்" என்று துவாரகா டி.சி.பி. கூறினார்.
மற்ற செய்திகள்