ATM-ல் கரெண்ட்டை கட் பண்ணி நூதன முறையில் கொள்ளை.. போலீசார் தெரிவித்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதியில் செயல்படும் ஏடிஎம்மில் தொழில்நுட்ப கோளாறு செய்து வங்கியில் 6 லட்சம் வரை மோசடி 2 நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கட்ட அப்பள நாயுடு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில், ‘நகரில் உள்ள ராமானுஜர் சர்க்கிள் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த இரு இளைஞர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது மின்சாரத்தை துண்டித்து, பணம் எடுத்தவுடன் மின்சாரத்தை வரவழைத்து பின்னர் அந்த வங்கிக்கு தொடர்பு கொண்டு தங்கள் ஏடிஎம்மில் எடுத்த பணம் வரவில்லை எனக்கு ஒரு புகார் அளித்ததாக வங்கி மேலாளர் ஒருவர் திருப்பதி கிழக்கு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தநிலையில் நேற்று மாலை திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏடிஎம் சென்று பணம் எடுப்பது பணம் வெளியே வரும்போது மின்சாரத்தை துண்டித்து பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு மின்சார இணைப்பு கொடுத்து, அதன் பின்வரும் ரசீதில் பணம் பெற்றுக் கொள்ளவில்லை தொழில்நுட்பக்கோளாறு என்பது தெரியவரும். இதனைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொடர்பு கொண்டு தங்கள் ஏடிஎம்மில் எடுத்த பணம் வரவில்லை என புகார் அளித்து மீண்டும் பணத்தைப் பெற்று வந்துள்ளனர்.
இவர்கள் இதுவரை 59 ஏடிஎம்களில் இதுபோன்ற நிகழ்வு செய்து உள்ளனர். இதில் பல வங்கிகள் பணம் தராத நிலையில் ஒரு சில வங்கிகளில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 99 ஏடிஎம் கார்டுகள் 2 செல்போன் 60 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளனர். அந்த தொழில்நுட்பம் குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் மற்றவர்களும் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது’ என காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கட்ட அப்பள நாயுடு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்