ATM-ல் வந்த ₹ 200 புது நோட்டு.. பார்த்துட்டு ஷாக் ஆன மனுஷன் .. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து போலி 200 ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில், போலி 200 ரூபாய் நோட்டினை ஒருவர் பிடித்திருக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தீபாவளி ஷாப்பிங்
இந்தியாவில் கடந்த 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் அமேதி பகுதியை சேர்ந்த ஒருவர் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய கடைவீதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அருகில் இருந்த ATM-ற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார் அவர்.
இதனையடுத்து, ATM-ல் தனது கார்டை உள்ளிட்டு பணத்தை எடுத்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட தொகை முழுவதும் 200 ரூபாய் தாள்களாக இயந்திரத்தில் இருந்து வந்திருக்கிறது. புது நோட்டுகளாக வந்த அந்த ரூபாய்களை அவர் தொடும்போது வித்தியாசமாக இருந்திருக்கிறது.
அதிர்ச்சி
இதனையடுத்து, அந்த ரூபாய் நோட்டை அவர் உற்றுப் பார்த்திருக்கிறார். ஏதோ தவறாக இருப்பதாக அவருக்கு தோன்றியிருக்கிறது. அப்போது வெளிச்சத்தில் ரூபாய் நோட்டுகளை பார்த்தபோதுதான் அவருக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கிறது. அந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று இருக்க வேண்டிய இடத்தில் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா (Children Bank of India) என இருந்திருக்கிறது. மேலும், ஃபுல் ஆஃப் ஃபன் (Full of Fun) எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, அடுத்து பணம் எடுக்க வந்த சிலருக்கும் இதேமாதிரியான போலி நோட்டுகள் வரவே, அதிர்ந்துபோன மக்கள் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். மேலும், வங்கியின் செய்தித் தொடர்பாளருக்கு இதுபற்றி தகவல் அளித்திருப்பதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் போலி 200 ரூபாய் நோட்டுகளை ஒருவர் கையில் பிடித்திருக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ATM dispersing fake 200 Rs notes in UP's Amethi district, such will not happen until top people hand is there 👇 pic.twitter.com/k2SESXUS5l
— 🅰️🅿️S🇮🇳 (@anooppsasi) October 25, 2022
மற்ற செய்திகள்