Sanjeevan M Logo Top

எதே இட்லிக்கு ATM-ஆ.. பட்டனை தட்டினால் சூடாக இட்லிகளை பரிமாறும் இயந்திரம்.. நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவில் இட்லிக்கு என ATM இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பட்டனை தட்டினால் இட்லிகளை வழங்கும் இந்த இயந்திரத்தை மக்கள் பயன்படுத்தி மகிழும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எதே இட்லிக்கு ATM-ஆ.. பட்டனை தட்டினால் சூடாக இட்லிகளை பரிமாறும் இயந்திரம்.. நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ..!

Also Read | வேலையில சின்னது பெருசுன்னு எதுவும் இல்ல.. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவியின் டீ கடை ..

இந்திய உணவுகளில் எப்போதும் இட்லிகளுக்கு என தனியான மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் பலரது விருப்ப உணவாக இட்லியே இருக்கிறது. சொல்லப்போனால் கடைகளில் முதலில் தீர்ந்துபோவது இட்லியாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமடைந்த இட்லியை கொண்டே புது ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கியிருக்கின்றனர் ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் எனும் இரு தொழிலதிபர்கள். முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத தருணத்தில் இட்லி வாங்க நகர் முழுவதும் அலைந்ததாகவும், அப்போது தான் இந்த இட்லி ATM அமைக்கும் திட்டம் தனக்கு வந்ததாகவும் கூறியிருந்தார் ஹிரேமத்.

ATM In Bangalore Delivers Fresh Idlis In Minutes

இந்நிலையில், இந்தியாவின் சிலிக்கன்வாலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் தங்களது முதல் இட்லி ATM-ஐ நிறுவியிருக்கிறது ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரனின் ‘Freshot Robotics' நிறுவனம். தற்போது பெங்களூருவில் இரண்டு இடங்களில் இட்லி ATM  திறக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பல்வேறு இடங்களில் இது திறக்கப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

24X7 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மிஷின், 12 நிமிடங்களில் 72 இட்லிகளை சமைத்து அளிக்கிதாம். அதுமட்டும் அல்லாமல் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பொடி மற்றும் சட்னி ஆகியவையையும் இந்த மிஷின் வழங்குவதாக தெரிகிறது. வாடிக்கையாளர் QR கோட் மூலமாக தங்களுக்கு தேவையான மெனுவை உள்ளீடு செய்துவிட்டால் போதும். 55 வினாடிகளில் சூடான இட்லி பரிமாறப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் தோசை, சாதம் மற்றும் ஜூஸ் ஆகியவற்றுக்கான தனித்தனி மிஷின்கள் நிறுவும் திட்டமும் இந்நிறுவனத்திடம் உள்ளதாம்.

ATM In Bangalore Delivers Fresh Idlis In Minutes

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், இந்த இட்லி ATM-ஐ மக்கள் பயன்படுத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "கான்டாக்ட் லென்ஸை எடுக்க மறந்துட்டேன்".. வலியோட வந்த பாட்டி.. கண்ல இருந்ததை பாத்துட்டு மிரண்ட டாக்டர்.. வைரல் வீடியோ..!

BENGALURU, ATM, DELIVERS, IDLIS, FRESH IDLIS, IDLI ATM

மற்ற செய்திகள்