'மது குடிக்குறதுல...' இந்தியாவிலேயே 'இந்த' மாநில பெண்கள் தான் நம்பர் 1...! - மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் தற்போது  பெண்களும் மதுப்பழக்கம் போதை வஸ்துக்களை அதிகமாக உபயோகித்து வருகின்றனர்.

'மது குடிக்குறதுல...' இந்தியாவிலேயே 'இந்த' மாநில பெண்கள் தான் நம்பர் 1...! - மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

இந்த நிலையில் இந்தியாவில் அதிகமாக மது குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் 2019-20 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 26.3% பெண்கள் மது அருந்துவது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களே மது அருந்துகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் மதுகுடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10% கீழ் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-06 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் அங்கு மது குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 7.5% ஆக மட்டுமே இருந்தது. அப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் 33% பெண்களும் சிக்கீம் 19% பெண்களும், சட்டீஸ்கரில் 11.4% பெண்களும் மதுபானங்களை குடித்து வந்தனர்.

தற்போது இந்த மாநிலங்கள் அனைத்திலும் மது அருந்தும் பெண்கள் குறைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் கடந்த 14 வருடங்களில் இல்லாத வகையில் மதுகுடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 26.3% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தேசிய அளவில் ஒப்பிடும்போது அருணாச்சல் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள 35.6%  ஆண்கள் மதுபானங்களை குடித்து வருகின்றனர்.

இந்தியா மாதிரியான வெப்ப மண்டல நாளுகளில் நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலைக்குரியது ஆகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மது என்பது மனித ஆற்றலை வீணடித்து தேசத்தின் வளர்ச்சியை தடைப்பட செய்யும் என்பதை மக்கள் தான் உணர வேண்டும்.

மற்ற செய்திகள்