அசாமில் கிடந்த தமிழ்நாட்டு பெண் உடல்.. சாமி டாலர் கொடுத்த முக்கிய Clue.. ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம் மாநிலம், காமரூப் என்னும் மாவட்டத்தில் சாங்சாரி என்னும் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டிருந்தது. மேலும் அந்த உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டிருந்ததை கவனித்த பொது மக்கள் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அசாமில் கிடந்த தமிழ்நாட்டு பெண் உடல்.. சாமி டாலர் கொடுத்த முக்கிய Clue.. ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | கிரிக்கெட் பிதாமகன் சச்சினுக்கு புதிய கவுரவம்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. முழு விபரம்..!

தொடர்ந்து இந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்த சூழலில் அந்த பெண் யார் என்பது பற்றியும் எதற்காக கொலை செய்தார் என்பது பற்றியும் இதற்கான காரணம் யார் என்பது குறித்தும் விசாரணையை தொடங்கி தீவிரப்படுத்தி வந்தனர்.

அப்படி இருக்கையில் அந்த பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்பது அவரது கழுத்தில் இருந்த சாமி டாலர் ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் அவருக்கு சுமார் 35 வயது இருக்குமென்ற தகவலும் தெரிய வந்த சூழலில், அவரது கொலையில் இராணுவ அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்ரிந்தர் சிங் வாலியா என்பவர் கர்னல் பதவி வகித்து வருகிறார். இவர் அசாமின் தேஜ்பூரில் ராணுவ மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு அம்ரிந்தர் சிங் ஏற்கனவே பழக்கம் ஆனவர் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்ரிந்தர் சிங்கை பார்ப்பதற்காக கவுஹாத்திக்கும் வந்துள்ளார் அந்த பெண். அப்போது அவர்களுக்கு இடையே ஏதோ தகராறு ஏற்பட்டு இறுதியில் கொலையில் முடிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இரவோடு இரவாக பெண்ணின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து சாலை ஓரமும் போட்டுச் சென்றுள்ளார் அம்ரிந்தர் சிங். போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்த சூழலில், அந்த பெண்ணை கொலை செய்ததையும் அவர் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, அந்த பெண்ணின் உடல் கிடைத்த பின்னர் அவரை பற்றி தீவிர விசாரணையில் இறங்கி ஆய்வு செய்த போது அவருக்கும் அம்ரிந்தர் சிங்கிற்கும் பழக்கம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்த சென்ற போது தான் அம்ரிந்தர் சிங் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | இந்து, கிறிஸ்டியன் என ஒரே நேரத்துல தமிழ்நாட்டில் நடந்த 800 பேரின் திருமணம்.. அமர்க்களப்படுத்திய இஸ்லாமிய மக்கள்..!

TAMILNADU WOMAN, ASSAM, ROADSIDE, POLICE ENQUIRY

மற்ற செய்திகள்