₹10 லட்ச ரூபாயில் 'லம்போர்கினி' காரை உருவாக்கிய இளைஞர்... நேரில் பாராட்டிய முதலமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவர் ரூபாய் 10 லட்சம் செலவில் லம்போர்கினி காரை உருவாக்கி அம்மாநில முதல்வருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

₹10 லட்ச ரூபாயில் 'லம்போர்கினி' காரை உருவாக்கிய இளைஞர்... நேரில் பாராட்டிய முதலமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் லம்போர்கினி. சொகுசு கார் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான லம்போர்கினியின் கார்களை வாங்க எப்போதுமே பலரும் விருப்பப்படுவது உண்டு. கோடிக்கணக்கில் விலை போகும் இந்த காரை எப்படியாவது ஒரு முறையேனும் ஒட்டி விட வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் தான் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூருல் ஹாக்யூ. 31 வயதான இவர் பாங்கா பஜார் என்னும் இடத்தில் கராஜ் ஒன்றை நடத்தி வருகிறார்.

கார்களை ரிப்பேர் செய்வது பழைய கார்களை புதியதாக மாடிஃபிகேஷன் செய்வது என தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நூருல். இவருக்கு எப்படியாவது லம்போர்கினி காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அப்போது தான் தானே ஒரு லம்போர்கினி காரை உருவாக்கினால் என்ன? என்று நூருலுக்கு தோன்றியிருக்கிறது. இதன்படி அந்த முயற்சியில் இறங்கிய நூருல் ஒரு மாருதி சுசுகி ஸ்விப்ட் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கி இருக்கிறார். அதனை லம்போர்கினி கார் போலவே வடிவமைக்க திட்டமிட்ட நூருல், மாடிஃபிகேஷனிற்கு  மட்டும் ரூபாய் 6.2 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். கார் வாங்கியது, அதற்கு செலவழித்தது என மொத்தம் ரூபாய் 10 லட்சம் வரை நூருல் செலவு செய்து உள்ளார்.

இறுதியில் தான் நினைத்தது போலவே லம்போர்கினி போலவே காட்சியளிக்கும் காரை அவர் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார். இந்த காரை நூருல், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு பரிசளித்துள்ளார். இதற்காக முதல்வரை நேரில் சந்தித்த நூருல் காரை அவருக்கு பரிசளித்திருக்கிறார். இளைஞரின் திறமையை கண்டு வியந்து போன அசாம் மாநில முதல்வர் அவருடைய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இந்த காரை மகிழ்வுடன்  ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாமல் நூருல் அடுத்ததாக தானாகவே ஃபெராரி கார் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனிடையே அவருக்கு சமூக வலைதளவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LAMBORGHINI, CAR, ASSAM, CM

மற்ற செய்திகள்