‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாகடவுள் சொன்னதால் தான் மகளை கொலை செய்ததாகக் கூறிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
![‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’.. ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/assam-ailing-man-throws-daughter-into-river-to-cure-himself-1-thum.jpg)
அசாமின் பாஸ்கா மாவட்டத்திலுள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருடைய மனைவி ஜூனு, மகள் ரிஷிகா (2). கடந்த சனிக்கிழமை குழந்தையை வெளியே அழைத்துச் சென்ற பீர்பால் சிறிது நேரம் கழித்து தனியாக வீடு திரும்பியுள்ளார். ஜூனு அவரிடம் குழந்தை எங்கே எனக் கேட்டபோது அருகில் ஓடும் போர்லோ ஆற்றில் விட்டுவிட்டதாக பீர்பால் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜூனு உடனடியாக இதுபற்றி உறவினர்களிடம் கூற அவர்கள் விரைந்து சென்று ஆற்றில் குழந்தையைத் தேடியுள்ளனர். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் பீர்பால், “கடவுள்தான் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால்தான் குழந்தையை ஆற்றில் வீசினேன்” எனக் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பி உடல்நிலை சரியாக இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. பெற்ற தந்தையே 2 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.