'அதிரடி காட்டிய நீதிமன்றம்'... 'நாளைக்கு விசாரணைக்கு வரும் ஜாமின் மனு'... பெரும் எதிர்பார்ப்பில் ஆர்யன் கான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

'அதிரடி காட்டிய நீதிமன்றம்'... 'நாளைக்கு விசாரணைக்கு வரும் ஜாமின் மனு'... பெரும் எதிர்பார்ப்பில் ஆர்யன் கான்!

கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்குச் சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

Aryan Khan, seven others sent to judicial custody for 14 days

இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் இன்று வரை என்சிபி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து 3 நாட்கள் காவல் முடிந்ததும் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போதைப் பொருள் தடுப்பு பிரிவு. இதையடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அடுத்த 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்யன் கான் உள்ளிட்டோரை வரும் 11 ஆம் தேதி தங்களின் காவலிலேயே வைத்து விசாரிக்க என்சிபி கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

மற்ற செய்திகள்