'எதிர்பார்ப்பெல்லாம் வீணா போச்சே'... 'இனிமேல் என்ன நடக்க போகுதோ'... 'உடைந்துபோன ஆர்யன் கான்'... நீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

'எதிர்பார்ப்பெல்லாம் வீணா போச்சே'... 'இனிமேல் என்ன நடக்க போகுதோ'... 'உடைந்துபோன ஆர்யன் கான்'... நீதிமன்றம் அதிரடி!

மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய அளவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் நான்கு நாட்கள் விசாரணை முடிந்ததும் ஆர்யன் கான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், என்.சி.பி. காவலை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

Aryan Khan has been denied bail after he was arrested By NCB

ஆனால் என்சிபி காவலில் அனுப்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏற்கனவே விசாரணைக்கு போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி, ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. ஜாமீன் வழங்க கோரி ஆர்யன் கான் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Aryan Khan has been denied bail after he was arrested By NCB

மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. எனவே, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார். இன்று நிச்சயம் ஜாமின் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆர்யன் கான் இருந்த நிலையில் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததால் அதிர்ச்சியில் உடைந்து போனார்.

மற்ற செய்திகள்