"என் வீட்டுக்கு சாப்பிட வருவீங்களா??"... ஆட்டோ ஓட்டுநர் வைத்த Request.. நெகிழ வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஒருவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு இரவு உணவு உண்ண அழைத்திருந்த நிலையில், நேராக சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது குஜராத் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திப்பு குஜராத்தில் நிகழ்ந்தது. அந்த சமயத்தில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்றும் என்னுடைய வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், நிச்சயமாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றும் என்னுடன் இரண்டு பேரை அழைத்து வரலாமா என்றும் கேட்டிருந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
விக்ரம் தண்டாணி என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் தான் சொன்னது போலவே இரவு நேரத்தில் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வரை தனது வீட்டிற்கு வரவேற்ற ஆட்டோ ஓட்டுநர் விக்ரம், அவரை உள்ளே அழைத்து சென்றார். இதனையடுத்து, ஆட்டோ டிரைவருடன் அமர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் உணவு அருந்தவும் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிற்பாடு வருகிறது. முன்னதாக, ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வருவதற்கு முன் போலீசார் அவரை தடுத்தி நிறுத்தியதும், சிறிய வாக்குவாதத்திற்கு பின் போலீசார் அனுமதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்