‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

3 முதல் 4 மாதங்களுக்குள் டெல்லியில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!

2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகளில், டெல்லியில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குள் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் இதற்கான பணிகள், தற்போது நடைபெற்று வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதன்படி டெல்லி முழுதுவம் முதற்கட்டமாக 11 ஆயிரம் இடங்களில் ஹாட் ஸ்பாட் வசதி வைக்கப்பட உள்ளது. அதில் 4,000 ஹாட் ஸ்பாட்கள் பேருந்து நிலையத்திலும், மீதி 7,000 ஹாட் ஸ்பாட்கள் சட்டப்பேரைவைத் தொகுதிகளில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் மாதம் 15 ஜிபி இலவச டேட்டா,  200 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தோடு முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

WIFI, FREE, DATA, DELHI, ARVINDKEJIRIWAL