‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாவலர் ஒருவரின் மகள் ஊரடங்கு உத்தரவு குறித்து உருக்கமான பதாகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த காவலர் ஒருவரின் மகள் கையில் ஒரு பதகையுடன் இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதாகையில், ‘என் தந்தை ஒரு காவலர். அவர் உங்களுக்கு உதவுவதற்காகதான் எங்களை பிரிந்து சென்றிருக்கிறார். தயவுசெய்து நீங்கள் அனைவரும் வீட்டிலிருந்து அவருக்கு உதவி செய்யுங்களேன்?’ என உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.
A sweet little girl, daughter of a Policeman in Arunachal Pradesh with an emotional yet powerful message. Let's appreciate all the Police Personnel and all those who are continously working in the field for the safety of everyone. #IndiaFightsCornona pic.twitter.com/LiD6L79hWl
— Kiren Rijiju (@KirenRijiju) March 31, 2020
இதுகுறித்து பதிவிட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு காவலரின் மகள் உணர்ச்சிமிக்க, சக்திவாய்ந்த ஒரு செய்தியை கூறியுள்ளார். அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பணியாற்றும் காவல்துறையினரை பாராட்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.