வெற்றி உயரத்துல இல்ல.. மன உறுதில இருக்கு.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஆர்த்தி IAS.. யாருப்பா இவங்க?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் பலபேருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். இவருடைய வாழ்க்கையும் கடின உழைப்பும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

வெற்றி உயரத்துல இல்ல.. மன உறுதில இருக்கு.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஆர்த்தி IAS.. யாருப்பா இவங்க?

Also Read | திருமணத்தை மீறிய உறவு.. தலைமறைவான ஜோடி லெட்டர் எழுதி வச்சுட்டு எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் தூத்துக்குடி..!

சிறப்பு கவனம்

உத்திர பிரதேச மாநிலத்தின் டேராடூனில் 1979 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆர்த்தி டோக்ரா. இவருடைய பெற்றோர் கர்னல் ராஜேந்திர டோக்ரா - கும்கும் டோக்ரா ஆவர். பிறவியிலேயே உயரம் குறைவாக இருந்ததால் ஆர்த்திக்கு சிறப்பு கவனம் தேவை என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். ஆனாலும், அவரை பொது பள்ளியில் அவர்களது பெற்றோர் படிக்க வைத்திருக்கின்றனர். டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்து முடித்த ஆர்த்தி, அதன்பிறகு ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

Arti Dogra IAS Officer Who Beat All Odds To Achieve Success

ஐஏஎஸ் கனவு

பட்டப்படிப்பை முடித்தவுடன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க தயாரானார் ஆர்த்தி. அதன்மூலம் 2005 ஆம் ஆண்டு முதல்முறை UPSC தேர்வில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் 56 வது  பிடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். இதனைமூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய பொறுப்புகள் ஆர்த்திக்கு வழங்கப்பட்டன.

முதன்முறையாக மாநில விநியோக அமைப்பான Discom-ன் நிர்வாக இயக்குனராக ஆர்த்தி பணியமர்த்தப்பட்டார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகளை தத்தெடுக்க மருத்துவர்களை ஊக்கப்படுத்தினார்.

Arti Dogra IAS Officer Who Beat All Odds To Achieve Success

அஜ்மீர் மாவட்ட ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்த்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை தேடித்தேடி செய்வதால் அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே கருதினர். மேலும், மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க வேண்டும் என பரப்புரை செய்துவந்த ஆர்த்தி வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல்சேர், சிறப்பு வாகன வசதி செய்துகொடுத்தது இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

விருது

2018 ஆம் ஆண்டு அஜ்மீர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆர்த்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதளித்து கவுரவப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தின் Daughters are Precious Award ஆர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Arti Dogra IAS Officer Who Beat All Odds To Achieve Success

3.5 அடி உயரம் கொண்ட ஆர்த்தி டோக்ரா இந்த உலகத்திற்கு சொல்வது ஒன்றைத்தான். அது,"சாதிப்பதற்கு உயரம் முக்கியமல்ல, மன உறுதியே முக்கியம்" என்பதுதான். பல்வேறு தடைகளை தாண்டி சாதித்த ஆர்த்தி பலருக்கும் ஆதர்சமாக திகழ்ந்து வருகிறார்.

Also Read | மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?

IAS OFFICER, ARTI DOGRA, ACHIEVE, ARTI DOGRA IAS OFFICER, ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ்

மற்ற செய்திகள்