ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |
ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!

உத்திர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனு சிங். 31 வயதான இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி பணி காரணமாக டெல்லிக்கு சென்றிருக்கிறார். அசாம் திப்ருகர் புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோனு, பரேலி நிலையத்தில் தண்ணீர் நிரப்ப கீழே இறங்கியிருக்கிறார். அப்போது, ரயில் நகர துவங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனு, ஓடிச் சென்று ரயிலில் ஏற முயற்சித்திருக்கிறார்.

Army Man Who Lost Leg After Being Pushed Under Train Dies

அப்போது, டிக்கெட் பரிசோதகர் சுப்பான் போர் அவரை கீழே தள்ளிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சமநிலை இழந்த சோனு ரயிலுக்கு கீழே விழுந்தார். இதன் காரணமாக அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்னொரு கால் கடுமையாக காயமடைந்திருக்கிறது. உடனடியாக சம்பவம் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அங்கே அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும், சுயநினைவற்ற நிலையில் இருந்த சோனு கடந்த புதன்கிழமை மரணமடைந்ததாக ராணுவ மருத்துவமனை அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக சோனுவின் நண்பரும், அந்த ரயிலில் பயணம் செய்தவருமான சுபேதர் ஹரேந்திரா சிங் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

Army Man Who Lost Leg After Being Pushed Under Train Dies

அதில்,"டிக்கெட் சம்பந்தமாக சோனு - டிக்கெட் பரிசோதகர் சுப்பான் போர் இடையே வாக்குவாதம் வந்தது. பரேலி ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்ப கீழே இறங்கினார் சோனு. ரயில் நகர துவங்கவே, அவர் ஓடிவந்து ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது, போர் அவரை கீழே தள்ளிவிட்டார். இதனால் ரயிலுக்கு அடியே சென்ற சோனுவின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இன்னொரு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன" என புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் சுபேதர் ஹரேந்திரா சிங்.

இதனிடையே டிக்கெட் சம்பந்தமாக எழுந்த வாக்குவாதத்தில் போர், சோனுவை கீழே தள்ளிவிட்டதாக ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் சுப்பான போரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்துவரும் காவல் ஆய்வாளர் அஜித் பிரதாப் சிங் தெரிவித்திருக்கிறார்.

Also Read | "நீங்க வந்தா மட்டும் போதும்".. குடியேறும் மக்களுக்கு ₹25 லட்சம் கொடுக்க ரெடியாக இருக்கும் நாடு..?? கல்யாணமே செஞ்சு வைக்கிறாங்களா..?

UTTARPRADESH, ARMY MAN, LEG, PUSH, TRAIN

மற்ற செய்திகள்