ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்திய கலைஞர்கள்.. ஜெய்ஹோ சொல்லி வாழ்த்திய இசைப்புயல்.. வைரலாகும் போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆஸ்கர் வென்ற இந்திய கலைஞர்களை இசைப்புயல் AR ரஹ்மான் வாழ்த்தியுள்ளார்.

ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்திய கலைஞர்கள்.. ஜெய்ஹோ சொல்லி வாழ்த்திய இசைப்புயல்.. வைரலாகும் போஸ்ட்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Elephant Whisperers : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

நாட்டு நாட்டு

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது.

AR Rahman Post about Naatu Naatu and The elephant whisperers

Images are subject to © copyright to their respective owners.

இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் AR ரஹ்மான் RRR படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில்,"கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கணிக்கப்பட்ட மற்றும் தகுதி வாய்ந்தது. உங்கள் இருவருக்கும் மற்றும் RRR படக்குழுவிற்கும் ஜெய்ஹோ" எனக் குறிப்பிட்டுள்ளார்.

The Elephant Whisperers

தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.

AR Rahman Post about Naatu Naatu and The elephant whisperers

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் இசையமைப்பாளர் AR ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில்," கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உத்வேகத்தின் வெள்ள வாயில்களைத் திறந்துவிட்டீர்கள்! ஜெய் ஹோ" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "இந்தியாவுக்கு கிடைத்த பெருமை".. ஆஸ்கர் விருது வென்ற இந்திய கலைஞர்கள்.. பிரதமர் மோடி வாழ்த்து..!

AR RAHMAN, AR RAHMAN POST, NAATU NAATU, THE ELEPHANT WHISPERERS, OSCAR 2023

மற்ற செய்திகள்