இந்த 'வாக்சின்' போடுற விதமே 'வித்தியாசமா' இருக்கு...! 'மொத்தம் மூணு டோஸ்...' - அடுத்து அறிமுகமாக உள்ள 'புதிய' வாக்சின் குறித்து வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்தை அவசரப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு அனுமதி பெற்று இந்தியாவில் இதுவரை ஐந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் கோவாக்சின் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி ஆகும்.
தற்போது அகமதாபாத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்து அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்து 3 டோஸ்களைக் கொண்டது. ஜைகோவ்-டி தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28-வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும்.
குறிப்பாக இவை ஊசி வழியே செலுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.
இவை குறிப்பாக, 12 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குத் தயாரித்திருந்தாலும், முதலில் பதின்வயதினருக்குப் பயன்படுத்தவே இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்க உள்ளதாக தெரிகிறது.
மற்ற தடுப்பூசிக்களை விட இந்த ஜைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்து, மனிதர்களுக்கு அதிக பாதுகாப்பும், திறன் மிக்கதாகச் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்