அப்பா ‘உயிரை’ காப்பாற்றிய மகன் கொடுத்த ‘கிஃப்ட்’.. வாழ்க்கையை நொடியில் மாற்றிய அந்த ‘பொருள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அப்பாவுக்கு மகன் பரிசாக வாங்கிக் கொடுத்த ஆப்பிள் வாட்ச் அவரது உயிரை காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

அப்பா ‘உயிரை’ காப்பாற்றிய மகன் கொடுத்த ‘கிஃப்ட்’.. வாழ்க்கையை நொடியில் மாற்றிய அந்த ‘பொருள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜன்ஸ் (61 வயது). இவரது மகன் சித்தார்த். கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தார்த் தன் தந்தைக்கு ஆப்பிள் வாட்சை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். வாட்சை அணிந்தபடியே ராஜன்ஸ் இரவு தூங்கியுள்ளார்.

Apple Watch saves 61-year-old man from heart attack

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ராஜன்ஸிக்கு, இரவு இதயத்துடிப்பு சீரற்ற வேகத்தில் இருந்ததை ஆப்பிள் வாட்ச் நோடிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு இதய வால்வுகளில் பிரச்சனை உள்ளது தெரியவந்துள்ளது.

Apple Watch saves 61-year-old man from heart attack

இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து ராஜன்ஸ் காப்பற்றப்பட்டார். இதுகுறித்து தெரிவித்த மகன் சித்தார்த், ‘இந்த வாட்ச் என் அப்பாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இது என் வாழ்க்கையை மாற்றிய பொருள்’ என தெரிவித்துள்ளார். மகன் ஆசையாக பரிசளித்த ஆப்பிள் வாட்ச் தந்தையை சரியான நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்