10 வயதில் வேர்கடலை வாங்கிய கடன்.. அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் அடைத்த இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

12 வருடங்களுக்கு முன்பு வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி வழங்கிய இளைஞரின் செயல் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

10 வயதில் வேர்கடலை வாங்கிய கடன்.. அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் அடைத்த இளைஞர்..!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது வேதசத்தையா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டு இருந்துள்ளார்.

AP youth repays 12-year peanut vendor debt

அவரிடம் சிறுவன் பிரவீன் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியுள்ளார். ஆனால் அவரது தந்தையிடம் அப்போது பணம் இல்லை. அதனால் வாங்கிய வேர்கடலை பொட்டலத்தை மீண்டும் வேதசத்தையாவிடம் பிரவீன் திருப்பிக் கொடுத்துள்ளார்.

AP youth repays 12-year peanut vendor debt

அப்போது, பணத்தை நாளைக்கு கொண்டுவந்து வேண்டுமானாலும் கொடுங்கள், இப்போது வேர்கடலையை சாப்பிடுங்கள் என்று வேதசத்தையா கூறியுள்ளார். இதனை அடுத்து மறுநாள் மோகன், பிரிவீன் இருவரும் கடற்கரைக்கு சென்றுள்ளனர். ஆனால் வேதசத்தையா அன்று வரவில்லை. இதன் பின்னர் மோகன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

AP youth repays 12-year peanut vendor debt

இதனிடையே காக்கிநாடாவுக்கு திரும்பிய பிரவீன் வேதசத்தையாவிடம் வாங்கிய 25 ரூபாய் கடனை தீர்ப்பு கொடுக்க விரும்பியுள்ளார். இதற்காக காக்கிநாடா கடற்கரைக்குச் சென்று வேதசத்தையா தேடுயுள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

AP youth repays 12-year peanut vendor debt

இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும், காக்கிநாடா எம்எல்ஏவுமான சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார். மேலும் வேதசத்தையா உடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேதசத்தையாவை தேடியுள்ளனர். அதைப்பார்த்த சிலர் வேதசத்தையா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

AP youth repays 12-year peanut vendor debt

இதனை அடுத்து வேதசத்தையாவின் மனைவியை காக்கிநாடா எம்எல்ஏ வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர், தான் 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 25 ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபாயாக பிரவீன் திருப்பி கொடுத்துள்ளார். இளைஞர் பிரவீனின் செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

YOUTH, DEBT, BEACH, KAKINADA

மற்ற செய்திகள்