"ஒரு உயிரை காப்பாத்திட்டோம்".. மாரடைப்பால் சரிந்த விவசாயி.. டக்குன்னு போலீஸ் அதிகாரி செஞ்ச உதவி.. சல்யூட் போட வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த விவசாயியின் உயிரை அங்கிருந்த காவல்துறை அதிகாரி காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

"ஒரு உயிரை காப்பாத்திட்டோம்".. மாரடைப்பால் சரிந்த விவசாயி.. டக்குன்னு போலீஸ் அதிகாரி செஞ்ச உதவி.. சல்யூட் போட வைக்கும் வீடியோ..!

Also Read | "Blood ரிப்போர்ட்ல கூட Comparison-ஆ??".. அலப்பறை அப்பாவின் வாட்சாப் 'மெசேஜ்'.. மகளின் வைரல் ரியாக்ஷன் 😂

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மகா பாதயாத்திரையை மேற்கொண்டனர். இதில் அமராவதி முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது, ஒரு விவசாயி திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார்.

AP Police is saving a life of a farmer who affected by a Heart attack

அமராவதியில் உள்ள பாலத்தில் பாதயாத்திரை நடைபெறும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரி, விவசாயி கீழே விழுவதை பார்த்து திடுக்கிட்டு அவர் அருகில் ஓடியுள்ளார். மாரடைப்பால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர், உடனடியாக Cardio Pulmonary Resuscitation (CPR) சிகிச்சையை அளித்தார். விவசாயியின் நெஞ்சில் கைவைத்து, தொடர்ந்து அவர் அழுத்திக்கொண்டே இருந்தார். இதனால் அந்த இடம் முழுவதும் பதற்றம் உருவானது.

ஆனால், தக்க சமயத்தில் போலீஸ் அதிகாரி செய்த உதவியால் விவசாயி உடல் தேறியிருக்கிறது. இதனை கண்டுகொண்ட காவல்துறை அதிகாரி உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளார். அங்கே அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் நலமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், விவசாயியின் உயிரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு அங்கிருந்தோர் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

AP Police is saving a life of a farmer who affected by a Heart attack

இதனிடையே ஆந்திர பிரதேச மாநிலத்தின் டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி அந்த காவலருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அம்மாநில காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"மகா பாதயாத்திரையின் போது விவசாயியின் உயிரை ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார். ராஜமகேந்திராவரம் பகுதியின் காவல் ஆய்வாளர் விவசாயி சரிந்து விழுவதை பார்த்து ஓடிச் சென்று உதவியுள்ளார். உடனடியாக அவர் Cardio Pulmonary Resuscitation (CPR) செய்து உள்ளார். இதனால் அவருடைய இதயம் சீரான பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவரை அனுப்பியுள்ளார். ஒருவருடைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்ததற்காக அந்த அதிகாரிக்கு டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் அந்த வீடியோவையும் இணைத்துள்ளது காவல்துறை. இந்நிலையில் இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Also Read | "உனக்கு என்ன பிரச்சனை..? ஏன் Body Shame பண்ற?".. தனலட்சுமி - அசல் வாக்குவாதம்.. என்னங்க ஆச்சு..?

POLICE, ANDHRA PRADESH, FARMER, LIFE, HEART ATTACK

மற்ற செய்திகள்