பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிவால், சந்திர பாபு நாயுடு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அநேகமாக இன்று மாலை அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள்கள் வெளியாகி பரவி வருகின்றன.

பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!

இதுகுறித்து ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. ஆந்திரப் பிரதேசம் என்றாலே சந்திர பாபு நாயுடுதான் முதல்வர் என்றிருந்த நிலையில், இப்படி ஒரு பெரும் மாற்றம் அம்மாநிலம் முக்கிய கவனம் பெற்றதற்குக் காரணமாகியுள்ளது.

சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களையும் ஜனசேனா கட்சி 1 இடத்தையும் பிடித்துள்ளன. இதனால் தெலுங்கு தேசம் கட்சியாளரும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமாவை இன்று மாலைக்குள் ஆளுநரிடம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

ஆனால் ஹைதராபாத்தில் இருக்கும் ஆளுநரை நேரில் சென்று சந்தித்து, சந்திர பாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பாரா? அல்லது இங்கிருந்தபடியே ஃபேக்ஸில் அனுப்புவாரா என்பது இன்னும் முடிவாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ELECTIONCOMMISSION, ELECTIONS, VOTECOUNTING, ELECTIONRESULTS2019, CHANDRABABUNAIDU, ANDHRAPRADESH, RESIGNATION, ASSEMBLY