திருநிறைச் செல்வன் 'கொரோனா குமார்!' .. திருநிறைச் செல்வி 'கொரோனா குமாரி!'.. 'ஒரே மருத்துவமனையில்' பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட 'அசத்தலான' பெயர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வெவ்வேறு தாய்மார்களுக்கு கொரோனா குமார் மற்றும் கொரோனா குமாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள வைரல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியர்கள் பலரும் இந்த கொரோனா சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனாவின் கொடூரத் துயரத்தின் நினைவாக கொரோனாவை ஒட்டி பெயர்களை வைத்துக்கொண்டு வந்தனர். முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என்று பெயர் வைக்கப்பட்டது. இதேபோல் கொரோனா மற்றும் கோவிட் ஆகிய பெயர்கள் சத்தீஸ்கரில் பிறந்த இரட்டைக்குழந்தைகளுக்கு சூட்டப்பட்டன.
இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் தாலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவரும், அபிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமாதேவி என்பவரும் வேம்பள்ளி மண்டலத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆனார்கள். அப்போது சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும் ரமாதேவிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.