"வீட்டுக்கு வர சொன்னார்னு .. நம்பி போனப்போ".. 'நயன்தாரா' பட வில்லன் நடிகரும், பிரபல இயக்குநருமான 'அனுராக் காஷ்யப்' பற்றி 'நடிகை' வெளியிட்ட 'பகீர் பாலியல்' புகார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேரோடும் வீதியிலே படம் மூலம் தமிழ் திரையுலகிலும் பயணம் செய்த மேற்கு வங்க ஹீரோயின் பாயல் கோஷ். தொடர்ந்து தெலுங்கு, பஞ்சாபி, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

"வீட்டுக்கு வர சொன்னார்னு .. நம்பி போனப்போ".. 'நயன்தாரா' பட வில்லன் நடிகரும், பிரபல இயக்குநருமான 'அனுராக் காஷ்யப்' பற்றி 'நடிகை' வெளியிட்ட 'பகீர் பாலியல்' புகார்!

இதனிடையே தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், பாலிவுட் இயக்குநரும், நயன்தாரா பட வில்லன் நடிகருமான அனுராக் கஷ்யப் தன்னை வீட்டிற்கு வரவழைத்து பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் தடுக்க முயன்ற தன்னிடம் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அனுராக் கஷ்யப் கூறியதாகவும் பாயல் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் இதுகுறித்து பேசிய பாயல் பல நாட்களாக இதுகுறித்து பேச நினைத்ததாகவும், தற்போது மீ டூ இயக்கம் பற்றி பேசும்போது இதனை பேசியதாகவும், இந்த ட்வீட்டால் பட வாய்ப்பு கிடைக்காது, அதை நீக்குங்கள் என்று தன் மேனேஜர் உள்பட பலர் தெரிவித்ததால் அந்த ட்வீட்டை நீக்கியதாகவும் அனுராக் கஷ்யப் தன்னை ட்விட்டரில் பிளாக் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அந்த புகார் வீடியோ வைரலான பிறகு தன் பெற்றோர் போன் செய்து தன்னை திட்டியதாகவும் பாயல் குறிப்பிட்டுள்ளார்.

வெர்சோவாவில் இருக்கும் அலுவலகத்தில் வைத்து தான் அனுராக் கஷ்யபை முதன் முதலில் சந்தித்தாகவும், பிறகு  தன் வீட்டிற்கு வருமாறு அனுராக் அழைத்ததன் பேரில், அங்கு சென்றபோது, தான் கத்தி கூச்சலிடாமல், கெஞ்சி விடுவித்துக்கொண்டு ஒருவழியாக அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவரது போனை அட்டென் செய்யவில்லை என்றும் பாயல் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாயலின் இந்த புகார் தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள அனுராக் கஷ்யப், இந்த புகார்கள் ஆதாரமற்றவை என்றும்,  தான் பாயலிடம் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டதில்லை என்றும், அது போன்ற செயல்களை ஊக்குவிப்பதும் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்