'இத்தனை நாள்தான் ஆன்டிபாடிகள் நீடிக்கும்'... 'அப்பறம் மீண்டும் கொரோனா தாக்குமா?'... 'ஆய்வு முடிவு கூறும் முக்கிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉடலில் ஆன்டிபாடிகள் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உடலுக்குள் செலுத்தப்படும் ஆன்டிபாடிகள் 60 முதல் 80 நாட்கள் வரையே உடலில் தங்கியிருக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவருடைய நோயின் தன்மைக்கேற்ப உடலில் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் நீடிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லியில் கடந்த 5 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 780 பேரின் மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் ஆன்டிபாடிகள் மறைவதால் ஒருமுறை பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், கொரோனா பாதித்த ஒருவரை மீண்டும் வைரஸ் தாக்குமா என்பது குறித்து புரிதலை உண்டாக்குவதில் இந்த முடிவு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உதவுமெனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
மற்ற செய்திகள்