'அவங்கள உயிரோட எரிச்சதுனால.. நான் பயந்துட்டேன்.. அதனால'.. பரபரப்பை கிளப்பிய தாசில்தாரின் பகீர் முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவின் குர்னூல் மாவட்டத்தில் உள்ள பட்டிகொண்டா மந்தல் பகுதி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி, தன்னைக் காண வரும் பொதுமக்களை சந்திக்கும்போது இடையில் தடுப்புக் கயிறு கட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
அண்மையில் தெலுங்கானாவின் அப்துல்லாபுர் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை சந்தித்து நில ஆவணங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தச் சென்ற நபர் சுரேஷ் என்பவர், போதையில் சென்று விஜயாவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் தெலுங்கானாவை பதறவைத்தது. அதுமட்டுமல்லாமல் தாசில்தாரை காப்பாற்றச் சென்ற டிரைவரும் கருகி மரணமடைந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பிறகுதான், பட்டிகொண்டா மந்தல் பகுதி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி யாரை சந்திப்பதாக இருந்தாலும் 5 அடி தூரத்தில்தான் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். இதன் காரணமாக தனது அலுவகத்தில் தனது மேஜைக்கும் சந்திக்க வருபவர்களுக்கும் இடையில் தடுப்புக் கயிறு ஒன்றை கட்டச் சொல்லியிருக்கிறார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்த கயிற்றை அவிழ்க்கச் சொல்லிவிட்டார்.
இதுபற்றி பேசிய உமா மகேஸ்வரி, ‘வட்டாட்சியர் விஜயாவுக்கு நடந்த சம்பவத்தினால் உண்டான பயத்தின் காரணமாகவே அவ்வாறு கயிறு கட்டினேன். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தி அதனை அவிழ்த்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.