'நாம ஆர்டர் பண்ண மவுத்வாஷ் தான் இருக்கும்னு நெனச்சு...' 'பார்சல ஓப்பன் பண்ணி பார்த்தா...' உள்ள இருந்த 'பொருள' பார்த்ததும் பயங்கர ஷாக்...! - கடைசியில என்ன பண்ணார் தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்போது ஏதாவது 100 ரூபாய் பொருள் வாங்க வேண்டும் என்றாலே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. பல நேரங்களில் இது பயனுள்ளதாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் தலைவலியை ஏற்படுத்தி விடும்.

'நாம ஆர்டர் பண்ண மவுத்வாஷ் தான் இருக்கும்னு நெனச்சு...' 'பார்சல ஓப்பன் பண்ணி பார்த்தா...' உள்ள இருந்த 'பொருள' பார்த்ததும் பயங்கர ஷாக்...! - கடைசியில என்ன பண்ணார் தெரியுமா...?

அதேபோல், அமேசானில் நாம் ஒன்று ஆர்டர் செய்தால் வேறெதாவது ஒன்றை அனுப்பிவிடுவது ஆங்காங்கு நடைபெறுகிறது. இது ஒரு சிலருக்கு கடுப்பை கிளப்பினாலும், ஒரு சிலருக்கு இன்ப அதிர்ச்சியையும் அளிக்கிறது.

அதுபோன்றதொரு சம்பவம் தான் மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகாவிற்கு நடந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரிலும் லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

அதில், 'வணக்கம், நான் அமேசானில் 4 கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்து, அதற்கு ரூ.396 கட்டணமாகவும் செலுத்தியுள்ளேன். என்னுடைய ஆர்டர் நம்பர் 406-9391383-4717957.

ஆனால் எனக்கு வந்த டெலிவரி பார்சலில் மவுத்வாஷிற்குப் பதிலாக ரெட்மி நோட் 10 இருந்தது. அதன்பின் ரெட்மி மொபைல் போனை திரும்பக் கொடுக்க முடிவு செய்து, அமேசானில் ரிடன் பாலிசி செய்தேன். இருந்தாலும், அமேசான் ஆப் வழியாக திரும்பக் கொடுக்க முடியவில்லை.

எனக்கு வந்த பார்சலின் முன்பக்கம் பேக்கேஜிங் லேபிளில் என்னுடைய பெயர் இருந்தது. ஆனால், அதன் உள்ளே இருந்த பில்லில் தெலுங்கானாவைச் சேர்ந்த வேறு ஒருவருடைய பெயர் இருந்தது.

அந்த ஆதாரங்களை கொண்டு சம்மந்தப்பட்டவரிடம் மொபைல் போனை ஒப்படைப்பதற்காக நான் அமேசானிற்கு இ-மெயில் செய்துள்ளேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

லோகேஷின் இந்த செயலை இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்