12-ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் - உடனடியாக வேலை தரும் ஆன்லைன் கம்பெனிகள்! - விவரங்கள் உள்ளே...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு காலத்தில் பல ஆன்லைன் நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக கூடுதல் நபர்களை பணி நியமனம் செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளது.

12-ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் - உடனடியாக வேலை தரும் ஆன்லைன் கம்பெனிகள்! - விவரங்கள் உள்ளே...

உலகெங்கிலும் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தற்போது அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது எனலாம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் இணையதளம் மூலம் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

ஊரடங்கில் சிலர் தங்களின் வேலைகளை இழந்து வந்தாலும், பல ஆன்லைன் சேவை நிறுவனங்கள தற்போது ஆயிரக்கணக்கான பணிவாய்ப்புகளை வெளியிட்டு வருகிறது

அதில் ஒன்றான அமேசான், தற்போது  நுகர்வோர் சேவைக்காக, ஐதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கல்கத்தா, கோவை, மங்களூர், புனே, நொய்டா, சண்டிகர், இந்தூர், போபால் மற்றும் பல நகரங்களில் 20,000 பேரை தேர்வு செய்ய போவதாக அறிவித்துள்ளது. கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், ஹிந்தில, தமிழ், தெலுங்கு அல்லது கன்னட மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இமெயில், சமூக வலைதளங்கள் மற்றும் போன் மூலம் நுகர்வோருக்கு உதவி செய்ய வேண்டும்.

மேலும் இந்தியாவில் இயங்கிவரும் காய்கறி, மளிகை விற்பனை நிறுவனமான பிக் பாஸ்கெட், கோபர்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஆன்லைன் தேவை அதிகரித்துள்ளதாக கூறி வேலை வாய்ப்பினை வெளியிட்டுள்ளதும். தற்போது நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றியுள்ள பேடிஎம் மால், இந்தியாவில் தொழிலை விரிவுபடுத்தும் வகையில், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் 300 பேரை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் லிசியாஸ், பாரத் பே, நோ புரோக்கர். காம் ஆகிய நிறுவனங்களும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அனைத்து வித பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனம் டெலிவரி, கிடங்கு நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் அறிவியல் துறைகளில் டில்லி, மும்பை, கல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத். ஆமதாபாத், சூரத், சண்டிகர், இந்தூர், பாட்னா, லக்னோ, கான்பூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து சுமார் 7000 பேரை தேர்வு செய்ய உள்ளதாகவும், அவர்கள்  தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு உபேர், ஓலா, ஸ்விக்கி, ஜோமெட்டா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவங்களின் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்த நிலையில், தற்போது புதிதாக ஆட்கள் தேர்வு மற்றும் பழைய ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதும் நடந்து கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்