Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

"எப்போவும் போல வேலைக்கு போன பொண்ணு, அன்னைக்கி திரும்பி வரவே இல்ல".. கால்வாயில் கிடந்த உடல்.. நாட்டையே உலுக்கிய பயங்கரம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், திடீரென காணாமல் போன நிலையில், அதன் பின்னர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

"எப்போவும் போல வேலைக்கு போன பொண்ணு, அன்னைக்கி திரும்பி வரவே இல்ல".. கால்வாயில் கிடந்த உடல்.. நாட்டையே உலுக்கிய பயங்கரம்!!

Also Read | App மூலம் பழக்கம்.. மகனுக்காக இரண்டாம் திருமணம்.. "கல்யாணம் ஆகி ஒரு இரவை தாண்டுனதும் அரங்கேறிய அதிர்ச்சி!!

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் அப்பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், வழக்கம் போல கடந்த சில தினங்களுக்கு முன்பாக பணிக்கு சென்றுள்ளார் அங்கிதா. ஆனால், அன்றிரவு வேலை முடிந்து வரும் வழக்கமான நேரத்தை தாண்டியும் அங்கிதா வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

ankita bhandari who missed few days ago found in canal

தனது மகள் காணாமல் போனதால், அங்கிதாவின் தந்தை இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார். இதனையடுத்து, அங்கிதாவை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அங்கிதா காணாமல் போன அடுத்த சில தினங்களில், அவர் வேலை பார்த்து வந்த சொகுசு விடுதிக்கு அருகே அமைந்துள்ள கால்வாய் ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ankita bhandari who missed few days ago found in canal

வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து கடைசியாக கிளம்பிய மகளை இப்படி ஒரு துயர நிலையில் பார்த்ததை கண்டு அங்கிதாவின் பெற்றோர்கள் கதறித் துடித்தனர். மகளின் மறைவு தொடர்பாக போலீசாரிடம் அங்கிதாவின் தந்தை புகார் ஒன்றையும் அளித்துள்ள நிலையில், இதற்கான காரணம் யார் என்பது பற்றி போலீசார் மும்முரமாக விசாரித்து வருகின்றனர்.

ankita bhandari who missed few days ago found in canal

முன்னதாக, முகநூல் நண்பர் ஒருவரிடம் அங்கிதா இறப்பதற்கு முன்பாக சில உரையாடல்கள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மறுபக்கம், அந்த விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட ஒரு சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் அங்கிதாவின் மரணம் அதிக பதற்றத்தை உருவாக்கி உள்ளதால், விரைவில் அவரது மரணத்திற்கான நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கையிலும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

இதனையடுத்து, தற்போது இளம் பெண்ணான அங்கிதா பண்டாரியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

Also Read | தோட்டத்தில் குழி தோண்டிய நபர்.. உள்ளே தெரிஞ்ச மர்ம சுவர்.. காரணம் தெரிந்ததும் உறைஞ்சு போயிட்டார்.!

UTTARAKHAND, ANKITA BHANDARI, MISSED, CANAL

மற்ற செய்திகள்