"நிறுத்துங்கடா கல்யாணத்த.. எங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்.." குட்பை சொன்ன மாப்பிளைக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாப்பாட்டின் பெயரில், திருமணம் நின்று போன சம்பவம் ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நிறுத்துங்கடா கல்யாணத்த.. எங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம்.." குட்பை சொன்ன மாப்பிளைக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்

"இன்னும் நம்பவே முடியல.." சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. ரெய்னாவை நினைத்து மனம் உருகிய ரசிகர்கள்

ஊர் முழுக்க மக்களை அழைத்து, பல ரூபாய் செலவு செய்து தான், திருமண நாளுக்கான ஏற்பாடுகளை மணமக்களின் வீட்டார்கள் செய்வார்கள்.

இதற்கு வேண்டி, பல தினங்களாக திட்டம் போட்டு, திருமண தினத்தினை மிகவும் ஸ்பெஷல் ஆக மாற்றவும் வேண்டி, அவர்கள் காத்திருப்பார்கள். ஆனால், இப்படி பிரம்மாண்டமாக உருவாகும் திருமண விழாக்கள், மேடைக்கு வந்த பிறகு, ஏதேனும் ஒரு காரணத்திற்காக நின்று போகும் செய்திகளை நாம் அதிகம் கடந்திருப்போம்.

திருமண ஏற்பாடு

சமீபத்தில் கூட, மணமேடைக்கு வந்து நின்று போன திருமணம், பல இடங்களில் நடந்துள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு திருமணமும், கல்யாண மேடைக்கு வந்த பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் Batauna என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வைத்து, ராஜ்குமார் என்ற இளைஞருக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

angry groom refuse for marriage after food served late

சாப்பாடு பெயரில் தகராறு

அதன்படி, திருமணம் நடைபெறும் இடத்திற்கு, தங்களது குடும்பத்தினருடன் மணமகன் வந்து சேர்ந்துள்ளார். தொடர்ந்து, திருமண சடங்குகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மணமகன் ராஜ்குமார் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும், திருமண விழாவை நிறுத்தி விட்டு, திரும்பி செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

கிளம்பிச் சென்ற மணமகன்

தொடர்ந்து, சாப்பாட்டின் பெயரில் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைக்க, ஊர் மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மணமகன் அங்கிருந்து கிளம்பி விட்டார் என தெரிகிறது. இதனால், திருமணமும் நின்று போனது. இதனிடையே, உணவு சமைப்பதற்காக செலவான பணத்துடன், பெண் வீட்டாரிடம் இருந்து வாங்கிய பைக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், மணமகனின் தந்தை, திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

angry groom refuse for marriage after food served late

பெண் வீட்டார் எடுத்த முடிவு

ராஜ்குமார் மற்றும் அவரது தந்தையின் செயலால் கடுப்பான மணப்பெனின் தாய், போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி, போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணமகனின் வீட்டார் திருமணத்தை நிறுத்த, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற வகையிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாப்பாடு கொடுக்க தாமதம் ஆனதன் பெயரில், திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மூலம் காதல்.. "பல பிரச்சன தாண்டி கல்யாணம் பண்ணியும்.. சேர்ந்து வாழுறதுல இவ்ளோ பெரிய சிக்கலா??"

ANGRY GROOM, MARRIAGE, FOOD SERVED LATE, மணமகன், திருமணம், பெண் வீட்டார்

மற்ற செய்திகள்