'சினிமாவில் கூட இப்படி பாக்க முடியாது'... 'ரூ.10 லட்சம் டெபாசிட்'... முதல்வர் ஜெகன் மோகனின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. அவர்களில் 11 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி கொரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்து, ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி ஜெகன் மோகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இதே போன்ற அறிவிப்பினை டெல்லி முதல் மந்திரி கெர்ஜரிவாலும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்