'எத்தனை ப்ளான் போட்டாலும்...' 'ஒரே ஒரு தடயம் மட்டும் போதும்...' - கேஸ் கட்டர், மிளகாய்பொடி, சிசிடிவி ஆஃப்-னு ஏகப்பட்ட ப்ளான்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாயூடியுப் பார்த்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-மில் 77 லட்சத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை ஆந்திர போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தாட்சேப்பள்ளியில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த 21-ஆம் தேதி ஏடிஎம்-மை உடைத்து அதிலிருந்த ரூ. 77 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தியத்தில், தெலங்கானாவை சேர்ந்த பிரசாத், வினை ராமுலு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் கொள்ளையடித்த ரூ.77 லட்சத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து கூறிய குண்டூர் புறநகர் காவல் மாவட்ட எஸ்.பி. விஷால் குன்னி, 2 கொள்ளையர்களும் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்தும், மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்து உள்ளார்கள், இருப்பினும் தடவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைது செய்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்