ATM ல் கொள்ளையடிக்க வந்த நபர்.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியும் நோ யூஸ்.. கடைசில நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த ஒருவர் பல மணிநேரம் போராடியும் தோல்வியுடன் திரும்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கடந்த 16 ஆம் தேதி இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த ஒரு பலே திருடன் கட்டிங் பிளேயர், கம்பி என பக்கா பிளானுடன் தனது திருட்டு ஆப்பரேஷனில் இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் தான் கொண்டுவந்த பொருட்களை வைத்து அந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க அந்த நபர் முயற்சித்திருக்கிறார்.
அசராத ஏடிஎம்
மாறி மாறி இயந்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கம்பியால் உடைத்தும் அந்த நபரால் ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் ஏடிஎம் மையத்திற்கு உள்ளே குட்டி போட்ட பூனைய போல அங்குமிங்கும் அவர் உலா வந்திருக்கிறார். இறுதி முயற்சியாக ஏடிஎம் மேலே கம்பி வைத்து திறக்க முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போனது. இதனால் வெறுத்துப்போன அந்த திருடர் அங்கிருந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
அப்போது கவனமாக தான் கொண்டுவந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அந்த நபர் சென்றிருக்கிறார். இவ்வளவு கவனமாக திருட்டில் ஈடுபட்ட அந்த நபர் ஏடிஎம் மையத்திற்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை மறந்துவிட்டு தன்னுடைய திறமைகளை காட்டியிருக்கிறார்.
புகார்
இந்த திருட்டு முயற்சி குறித்து தனியார் வங்கி அனந்தபூர் காவல் துறையிடம் புகார் அளித்து இருப்பதாக தெரிகிறது. நள்ளிரவில் கடப்பாரை, கட்டிங் பிளேயர் உள்ளிட்ட கருவிகளுடன் ஏடிஎம் மையத்தில் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயற்சித்த நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்