'மகளிர் தினத்தில்...' 'மொபைல் வாங்கும் பெண்களுக்கு...' - 'வேற லெவல்' ஆஃபர் அளித்துள்ள ஆந்திர அரசு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் வரும் மகளிர் தினத்தன்று பெண்கள் வாங்கும் மொபைல் போன்களுக்கு 10% தள்ளுபடியும், பெண் காவலர்களுக்கு விடுமுறை என பல்வேறு அறிவிப்புகளை வெளியுள்ளார் முதல்வர் ஜெகன்மோகன்.
வரும் மார்ச் 8 ஆம் தேதியான உலக மகளிர் தினத்தை விமர்சையாக கொண்டாடும் விதத்தில் ஆந்திர அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8 ஆம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் பாதுகாப்பு 'ஆப்' பான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது.
செல்போன்களுக்கான இந்த தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜூனியர் கல்லூரிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் திஷா செயலியை குறித்து விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கைய் விடுத்துள்ளார்.
மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் நடத்தவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்தது.
மற்ற செய்திகள்