‘கொரோனாவை குணப்படுத்த நாட்டு மருந்து’!.. கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டம்.. அவசர அவசரமாக ‘டெஸ்ட்’-க்கு அனுப்பிய ஆந்திர அரசு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் ஆனந்தய்யா என்பவர் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்த ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

‘கொரோனாவை குணப்படுத்த நாட்டு மருந்து’!.. கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டம்.. அவசர அவசரமாக ‘டெஸ்ட்’-க்கு அனுப்பிய ஆந்திர அரசு..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர்.

Andhra govt allows Anandaiah herbal medicine for COVID patients

இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மருந்து விநியோகத்தை அம்மாவட்ட ஆட்சியர் நிறுத்தினார். இதனை அடுத்து அம்மருந்துகள் அனைத்தும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

Andhra govt allows Anandaiah herbal medicine for COVID patients

ஆய்வின் முடிவில் ஆனந்தய்யா வழங்கிய ஆயுர்வேத மருந்தில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனை அடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனாலும் அவர் வழங்கி வந்த கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்