இனிமேல் இந்த 'நாலு சுவத்துக்குள்ள' தான் நம்ம உலகம்...! ஒன்றரை வருஷமா 'கதவ' உள்பக்கமா 'லாக்' பண்ணிட்டு வாழ்ந்த குடும்பம்...! - கதவ உடைச்சு உள்ள நுழைஞ்ச போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜோலு கிராமத்தை சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கொரோனா பரவி வந்தது முதல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். அந்த வீட்டிற்குள் அவரின் மனைவி மற்றும் ஒரு ஆண் மகனும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்துள்ளனர்.

இனிமேல் இந்த 'நாலு சுவத்துக்குள்ள' தான் நம்ம உலகம்...! ஒன்றரை வருஷமா 'கதவ' உள்பக்கமா 'லாக்' பண்ணிட்டு வாழ்ந்த குடும்பம்...! - கதவ உடைச்சு உள்ள நுழைஞ்ச போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

அரசு கூறிய கட்டுப்பாட்டின் படி அந்த குடும்பத்தார் வீட்டுக்குள்ளேயே இருந்தது பாராட்டத்தக்கது தான். ஆனால், கடந்த ஒன்றரை வருடமும் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உணவு, காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க மட்டும் அவரின் மகன் வெளியே மாதம் ஒரு முறை வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதோடு கொரோனா தொற்று பரவிவிடும் என்பதற்காக அக்கம்பக்கத்தினர் யாருடனும் பேசுவதையும் தவிர்த்து தனித் தீவில் வாழ்வது போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு முதல்-மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக கிராம பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு தருமாறும் கேட்டுள்ளனர்.

அப்போதும் அந்த விவசாயி குடும்பத்தார் நாங்கள் இப்போது வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா வந்துவிடும் என்பதால் வெளியே வர முடியாது என திட்டவட்டமாக கூறி கதவை திறக்க மறுத்து விட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மேலும் கூடுதலாக பரவியது. அதையடுத்து ஒன்றரை ஆண்டுகளாக கதவை திறக்காத இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர்.

அதன்பின் அவர்களை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்