"நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றி பேசியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..!

Also Read | "எல்லோருக்கும் ரொம்ப நன்றி".. தினேஷ் கார்த்திக்கின் உருக்கமான பதிவு.. ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு..!

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. இதனிடையே நேற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டையில் ’பூ ஹக்கு’ (Bhu Hakku) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெகன் மோகன். அப்போது ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றி விமர்சித்தார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில்,"நான் எம்ஜிஆர், என்டிஆர் போன்றவன். கட்சி துவங்கி மக்களிடம் ஆதரவை பெற்று முதல்வர் ஆகியுள்ளேன். ஆனால், சந்திர பாபுவோ தனது மாமனாரிடம் இருந்து கட்சியை அபகரித்துக்கொண்டார். அவருக்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நியாமான முறையில் கட்சி துவங்கி ஆட்சிக்கு வந்தவர்களை எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெகன் என்பார்கள். மறுபுறம் துரோகம் செய்பவர்களை சந்திரபாபு என்பார்கள். ஆம், நான் எம்ஜிஆர், என்டிஆர் போல ஆட்சிக்கு வந்தவன். ஆனால் , அவர் தனது சொந்த மாமனார் ராமராவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியவர். அதனால் தான் மக்கள் என்னை ராமர் என்றும் சந்திரபாபுவை ராவணன் என்றும் விமர்சிக்கிறார்கள். சந்திர பாபுதான் இன்றைய ராவணன்" என்றார்.

Andhra CM JeganMohan calls Chandrababu today Ravana

தொடர்ந்து பேசிய அவர், சந்திரபாபு நாயுடுவின் மகன் சிறுநீரக பதிப்படைந்தவர்களை சந்தித்தது பற்றி குறிப்பிட்டார். அப்போது, முந்தைய ஆட்சியில் சிறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கு சந்திரபாபு என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார். மக்களிடம், தன்னுடைய ஆட்சியில் நடப்பவற்றை உற்று கவனிக்கும்படியும் தங்களது குடும்பங்களில் அதனால் யாரேனும் பயன் அடைந்திருந்தால் தனக்கே வாக்களித்து மீண்டும் முதல்வராக்க வேண்டும் எனவும் ஜெகன் மோகன் கோரிக்கை வைத்தார்.

Andhra CM JeganMohan calls Chandrababu today Ravana

ஆந்திராவில் சட்டசபை தேர்தல் இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெற இருக்கிறது. அதோடு, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலும் நடைபெற இருக்கும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | அடி தூள்.. இனி 10, 20₹ நாணயங்களை வாங்கித்தான் ஆகணும்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.. முழுவிபரம்..!

ANDHRA PRADESH, ANDHRA CM, CM JEGANMOHAN, ANDHRA CM JEGANMOHAN, CHANDRABABU, RAVANA

மற்ற செய்திகள்