ஒரு ரூபாய்க்கு ஒரு வீடு...! ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டி தர...' - ஆந்திர அமைச்சரவை ஒப்பதல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் வீடுகள் வழங்கும் திட்டம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு ஒரு வீடு...! ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டி தர...' - ஆந்திர அமைச்சரவை ஒப்பதல்...!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி தான் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்துள்ளார். மேலும் அவரின் 'நவரத்தினங்கள்' எனும் 9 முக்கிய திட்டங்களான ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாயக் கடன், வேலை வாய்ப்பு, பூரண மது விலக்கு உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்.

மேலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பணமும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம், தள்ளு வண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில், நகர்புறத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு வீடுகளை கட்டித்தருவது என்றும், அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்