போதும்டா சாமி.. 2020-ஐ கடக்குறதுக்குள்ள.... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையத்தின் ‘அடுத்த’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழகத்தில் நிவர் புயல் ஒரு புரட்டு புரட்ட முயற்சித்தது.

போதும்டா சாமி.. 2020-ஐ கடக்குறதுக்குள்ள.... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையத்தின் ‘அடுத்த’ அறிவிப்பு!

எனினும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிவர் புயலில் பெரிதளவில் பாதிக்கப்படாமல் தப்பித்தது தமிழகம். இதனிடையே அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான புரெவி புயல் உருவானது. அது திரிகோணமலை அருகே கரையை கடக்கத் தொடங்கிய நிலையில்,  நாகை கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

வேளாங்கண்ணி, நாகூர், திருப்பூண்டி பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இதேபோல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், சோழவந்தான் ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்