Naane Varuven M Logo Top

"இதான் சார் எங்க இந்தியா".. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமான முறையில் நெட்டிசன்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

"இதான் சார் எங்க இந்தியா".. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

Also Read | துபாயில் கட்டப்பட்ட பிரம்மாண்ட இந்து கோவில்.. திறந்துவைத்த அமீரக அமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தசரா

நாடுமுழுவதும் இன்று தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நாள் வட மாநிலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் மக்கள் கர்பா மற்றும் தாண்டியா நடனமாடி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாட்ட முறைகள் மற்றும் சடங்குகள் வேறுபட்டாலும் பொதுவாக இந்தியா முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தசராவை முன்னிட்டு கர்பா நடனமாடியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை பகிர்ந்து வித்தியாசமான முறையில் நெட்டிசன்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Anand Mahindra wishes happy Dussehra with a cheerful video

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வீடியோ

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் வட்டமாக சூழ்ந்து நடனமாடிய இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா அதில்,"இந்தியப் பொருளாதாரம் எப்படி ஒரு பிரகாச ஒளியாக இருக்கிறது என்று உலகமே பேசுகிறது. இது நமது பொருளாதாரம் மட்டுமல்ல. நாம் நடனமாடத் தயாராக இருப்பதிலிருந்து இந்த வெளிச்சமும் வருகிறது. சில நாடுகள் போரில் உழன்றாலும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை நாம்  கொண்டாடுகிறோம். அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.

 

Also Read | விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கணவனுக்கு தெரியவந்த உண்மை.. உடனே சுதாரிச்சுக்கிட்ட மனைவி போட்ட பிளான்.. மொத்த கேஸையும் முடிச்சு வச்ச ஒரு போன்கால்..!

ANAND MAHINDRA, DUSSEHRA, ANAND MAHINDRA WISHES DUSSEHRA

மற்ற செய்திகள்