'போடா டேய்'.. தமிழில் ஆனந்த் மகேந்திரா போட்ட ட்வீட்.. பொங்கல் அதுமா.. தமிழர்களை இப்படி நெகிழ வச்சுட்டாருப்பா

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொங்கல் பண்டிகை தினமான இன்று, தமிழ் பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

'போடா டேய்'.. தமிழில் ஆனந்த் மகேந்திரா போட்ட ட்வீட்.. பொங்கல் அதுமா.. தமிழர்களை இப்படி நெகிழ வச்சுட்டாருப்பா

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர்.

மற்ற தொழிலதிபர்களை போல இல்லாமல், ஒரு சில விஷயத்தில், சற்று தனியாக தெரிபவர். குறிப்பாக, இணையத்தில், எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொழில் குறித்த தகவல்கள், பொது மக்களின் வித்தியாசமான கண்டுபிடிப்புகள், சுவாரஸ்ய தகவல்கள், நகைச்சுவை உள்ளிட்ட பல விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்.

தமிழ் குறித்த ட்வீட்

சமீபத்தில் கூட, தமிழகத்தின் கொல்லிமலை குறித்தும் ட்வீட் ஒன்றும் செய்திருந்தார். இதனிடையே, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் மொழி குறித்த அசத்தல் ட்வீட் ஒன்றை, ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.

'நான் பள்ளிக்கூடம் படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். இந்த சொல்லைத் தான் நான் முதல் முதலாக தமிழில் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, இந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கினேன். சில சமயம் சத்தமாகவும் சொல்லி இருக்கிறேன். சில சமயம் மனதுக்குள்ளும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

முதல் வார்த்தை

அந்த வார்த்தை என்ன என்பது பற்றி, புகைப்பட வாசகம் ஒன்றுடன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஆங்கிலத்தில் நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை, தமிழில் நாம் எளிதாக சொல்லி விடலாம் என்பதைத் தான் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தார்.

'ஆங்கிலத்தில், 'உங்களின் விளக்கத்தைக் கேட்கவோ அல்லது உங்களின் தரப்பிலான கருத்து பற்றிக் கேட்டுக் கொள்ளவோ, எனக்கு நேரமில்லை. அதனால், என்னை தனியே விடுங்கள்' என சொல்வதற்கு பதில், தமிழில், "போடா டேய்" என எளிதில் முடித்துக் கொள்ளலாம்' என குறிப்பிட்டிருந்தார்.

 

திட்ட பயன்படுத்துவேன்

அது மட்டுமில்லாமல், கமெண்ட்டில் ஒருவர், நீங்கள் இதனுடன் சில தமிழ் கெட்ட வார்தைகளையும் நிச்சயம் கற்றுக் கொண்டிருப்பீர்களே என கேட்டதற்கு, ஆனந்த் மஹிந்திரா நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். 'நிறையவே கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். சென்னையில், எனது கார் மீது யாராவது மோதுவது போல வந்தால், அவர்களை மனதுக்குள் திட்ட உபயோகிப்பேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

பொங்கல் நாளான இன்று, ஆனந்த் மஹிந்திராவின் தமிழ் குறித்த ட்வீட், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ANAND MAHINDRA, PONGAL, TAMIL, பொங்கல், ஆனந்த் மஹிந்திரா, தமிழ்

மற்ற செய்திகள்