"அப்பாடா, அத நம்புறது நாம மட்டும் கிடையாது.." ஆனந்த் மஹிந்தராவின் வேடிக்கையான ட்வீட்.. மனுஷன் கேப்ஷன் தான் சும்மா அள்ளுது!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
Also Read | "நாலு வாரமா வாடகை தரல.." சகோதரிகள் வீட்டின் கதவை திறந்ததும் வந்த துர்நாற்றம்.. ஒரு மாசமா தொடரும் 'மர்மம்'!!
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்நிலையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த இறப்பு சான்றிதழ் தொடர்பான இணையதளம் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அப்படி அவர் பகிர்ந்த அந்த ஸ்கிரீன் ஷாட்டில், இறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கை உள்ளது. அதில் யாருக்கான இறப்பு சான்றிதழ் என்ற கேள்வியுடன் கீழே, 'Myself' என்றும், 'Someone else' என்றும் இரண்டு பாக்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறப்பு சான்றிதழ் யார் என குறிப்பிட்டு கீழே இறந்த நபருக்கும் ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ள தகவல், இறந்தவர் எப்படி அவருக்காகவே இறப்பு சான்றிதழை விண்ணப்பிக்க முடியும் உள்ளிட்ட பல கேள்விகளை நெட்டிசன்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய கேப்ஷனில், "எனவே மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை நம்பும் ஒரே கலாச்சாரம் நாம் மட்டும் கிடையாது" என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் மற்ற ட்விட்டர் பதிவுகளைப் போல, இந்த வேடிக்கையான பதிவும் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்