என்னவா இருக்கும் 'இந்த' பொருள்...? 'ஒரு ஃபோட்டோவை பகிர்ந்து என்னவென்று கண்டுபிடிக்க சொன்ன ஆனந்த் மஹிந்திரா...' - என்ன இப்படி தலைய பிச்சுக்கிட்டு அலைய விட்டுட்டாரு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமாக, நகைச்சுவையாக ட்விட் செய்வதில் ஆர்வமுள்ளவர். அவரின் நகைச்சுவை ததும்பும் மீம்ஸ்களை ஷேர் செய்வது,  ஒரு சில ட்வீட்களை குறியீடுகளாக, பார்ப்பவர்களின் மூளைக்கு வேலை வைப்பதாக பதிவிடுவார். அவர் குறிப்பிட்டுள்ளதை பற்றி தேடும் ஆர்வமும், அவர் பயன்படுத்தும் வார்த்தைகளின் பிரயோகமும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

என்னவா இருக்கும் 'இந்த' பொருள்...? 'ஒரு ஃபோட்டோவை பகிர்ந்து என்னவென்று கண்டுபிடிக்க சொன்ன ஆனந்த் மஹிந்திரா...' - என்ன இப்படி தலைய பிச்சுக்கிட்டு அலைய விட்டுட்டாரு...!

அவ்வகையில் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில்,  ஒரு புதிரான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து, 'இந்த பொருள் என்ன என்பதை அடையாளம் காண முடிகிறதா.? எந்தவொரு மில்லினியல்களாலும் இது அடையாளம் காணப்படாது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அந்த படம் என்ன என்பதை விட அவர் பிரயோகித்த அந்த மில்லினியல்கள் (millennial) என்றால் என்ன என்பது அனைவராலும் தேடப்பட்ட ஒன்றாக இருந்தது.

அதற்கான பொருள், மில்லினியல் என்ற வார்த்தை 1981 மற்றும் 1996க்கு இடையில் பிறந்த குறிப்பாக 2019-ல் 23 முதல் 38 வயது நிரம்பிய நபர்களை குறிப்பிட பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகும்.

அதோடு மில்லினியல் இல்லையென்றால் இந்த புகைப்படம் என்ன என்பதை கண்டுபிடிக்க இயலாது என்று சொன்னதற்கு காலம் சார்ந்த காரணம் தான்.

அவர் பதிவிட்ட அந்த புகைப்படம், ஒரு கருப்பு பின்னணியில் நகரும் ஒரு புதிரான உலோக பொருளைக் கொண்டுள்ளது. சில்வர் நிறத்தில் கோள வடிவில் இருக்கும் அந்த உலோக பொருள் பைப் போன்ற வடிவிலான சில ஆண்டெனாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இது என்ன பொருள் என்பதை சிலர் கண்டுபிடித்தனர். இது ஒரு செயற்கை கோள். ஸ்புட்னிக் 1 (Sputnik 1), இது மனிதனால் உருவாக்கப்பட்டு பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கை கோள் ஆகும்.

இது 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 அன்று சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தானில் உள்ள டியூரட்டத்தில் (சிறிய நகரமான பைகோனூருக்கு தென்மேற்கே 370 கி.மீ) பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்பட்டது. இதன் எடை 83 கிலோ மற்றும் 23 அங்குல அகலம் கொண்டது.

 

மற்ற செய்திகள்