பிரிட்டன் பிரதமர் வீட்டுல மாவிலை தோரணம்.?.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம்.. வைரல் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரிட்டன் பிரதமர் வீட்டில் மாவிலை தோரணம் கட்டியதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. ஆனால், அவர் போட்ட கேப்ஷன் தான் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் வீட்டுல மாவிலை தோரணம்.?.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம்.. வைரல் பின்னணி..!

Also Read | "நன்றி அப்பா".. கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ.. பின்னணி என்ன..?.. வைரலாகும் ட்வீட்..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பிரிட்டன் பிரதமர்

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு வருகின்றனர். இதில் இந்திய பூர்வீகத்தை சேர்ந்த ரிஷி சுனக்-கும் ஒருவர்.

Anand Mahindra tweeted about desi 10 Downing Street

ட்வீட்

இந்நிலையில், இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் பிரதமர் வசிக்கும் வீடு 10 Downing Street எனப்படுகிறது. இந்த புகைப்படத்தில் வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் சுவர்களில் சுவஸ்திக் சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. பொதுவாக புதுவீட்டுக்கு செல்லும்போது இந்திய மக்கள் இதுபோன்ற அலங்காரங்களை மேற்கொள்வார்கள்.

ஆனந்த் மஹிந்திரா அந்த ட்வீட்டில்,"எதிர்கால 10 டவுனிங் தெரு? புகழ்பெற்ற பிரிட்டிஷ் நகைச்சுவை இப்போது தேசி (Desi) நகைச்சுவையுடன் இணைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன்மூலம் மறைமுகமாக இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதை ஆனந்த் மஹிந்திரா மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | "என்ன வேணும்னாலும் செய்ங்க.. ஆனா".. ராணுவத்துக்கு ஆர்டர் போட்ட ரணில்.. என்ன நடக்கிறது இலங்கையில்..?

ANAND MAHINDRA, ANAND MAHINDRA TWEET, DESI 10 DOWNING STREET

மற்ற செய்திகள்