"தோல்வி கூட வலிக்கல.. ஆனா".. உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா.. ஆனந்த் மஹிந்திராவின் அட்வைஸ் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, இங்கிலாந்து அணியுடனான நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது பற்றி ட்வீட் செய்திருக்கிறார்.
Also Read | முடிவுக்கு வந்த சிறைவாசம்.. நளினி உள்ளிட்ட 6 பேருக்கு விடுதலை.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.
அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் குவித்தனர்.
உலகக்கோப்பை T20 தொடரின் அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது இந்திய ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பட்லர் - அலெக்ஸ் இணையை கடைசிவரை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியாமல் போனது.
இந்நிலையில்,தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"வலியை ஏற்படுத்துவது தோல்வி அல்ல. தோல்வி பெற்ற விதம். மாறிவரும் விளையாட்டு சூழ்நிலை அசாதாரணமானதாக இருந்திருக்கலாம். சரி, எழுச்சி பெறுவதற்கான மற்றொரு வாய்ப்பாக இதைப் பார்ப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
Also Read | சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
மற்ற செய்திகள்