"அட, பழத்த இப்டி கூட பறிக்கலாமா??.." வியந்து போன ஆனந்த் மஹிந்திரா.. இணையத்தில் ஹிட்டாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

"அட, பழத்த இப்டி கூட பறிக்கலாமா??.." வியந்து போன ஆனந்த் மஹிந்திரா.. இணையத்தில் ஹிட்டாகும் வீடியோ

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய தொழிலில் அதிக அளவில் ஈடுபாடுடன் இயங்கி வருவது போலவே, சமூக வலைத்தளங்களிலும் அவர் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும், தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை அதிகம் கவனித்து, அதனை பகிரும் வழக்கத்தையும் கொண்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

பாராட்டும் ஆனந்த் மஹிந்திரா

புது புது திறமைகள் கொண்டு விளங்கும் நபர்களின் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள், இணையத்தில் தன்னை மெய் சிலிர்க்க செய்யும் விஷயங்கள் என ஏராளமானவற்றை, ஆனந்த் மஹிந்தராவின் ட்விட்டர் பக்கத்தில் காண முடியும். அது மட்டுமில்லாமல், தகுந்த நபர்களுக்கு தன்னாலான அங்கீகாரத்தையும் வழங்கக் கூடியவர் ஆனந்த் மஹிந்திரா.

anand mahindra shares video of tool to pluck fruits

சமீபத்தில் கூட, சுற்றுலாவாசிகளிடையே பிரபலமான பெங்களூரு - உடுப்பி சாலையின் புகைப்படத்தை பகிர்ந்து, அதற்குள் டைவ் அடிக்க தூண்டுகிறது என்றும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தார். அதே போல, மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டரில், மணமக்கள் வந்த வீடியோவும் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

பழங்களை பறிக்கும் கருவி

அந்த வகையில், ஆனந்த் மஹிந்திரா தற்போது பகிர்ந்துள்ள ட்வீட்டும், பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது. பொதுவாக, மரத்தில் இருந்து பழங்களை பறிக்க நிறைய கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றைக் கொண்டு, பழங்களை பறிக்கும் புதுமையான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோவில், நபர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பாகத்தை வடிவமாக வெட்டி, அதனை ஒரு பைப் ஒன்றில் இணைத்து, பழங்களை பறிக்க கருவியாக இயக்குகிறார். மேலும், இந்த பாட்டில் மூலம் உருவான கருவியை பயன்படுத்தும் போது, இந்த பழங்கள் கீழே விழுந்து சேதங்கள் உருவாகாமல், நேராக அந்த பாட்டிலுக்குள் சென்று விடுகிறது.

இது பெரிய கண்டுபிடிப்பு இல்ல, ஆனா

இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றுமில்லை தான். ஆனால், நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம், இது வளர்ந்து வரும் டிங்கரிங் கலாச்சாரத்தை காட்டுகிறது. கண்டுபிடிப்புகளின் மையமாக அமெரிக்கா மாறியதற்கு காரணம், அங்குள்ளவர்கள் வொர்க் ஷாப் உள்ளிட்ட  இடங்களில் சோதனைகளை செய்து கொண்டே இருந்தது தான்' என டிங்கரிங் செய்பவர்களையும் பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

anand mahindra shares video of tool to pluck fruits

இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

ANAND MAHINDRA, VIRAL VIDEO

மற்ற செய்திகள்