இவருக்கு அங்கீகாரம் கிடைக்கணும்.. இளைஞரின் வித்தியாசமான முயற்சி.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவித்தியாசமான முறையில் உணவு பொருட்களை விற்கும் இளைஞர் ஒருவரை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். மேலும், அவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக ஒவ்வொரு வேலையிலும் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே, அதில் சிறந்து விளங்க முடியும். சவால்களை தங்களது வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற தெரிந்தவர்கள் அதில் எளிதில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில் உணவுப்பொருள் விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் அதிரடியாக இசை எழுப்பியபடி பொருட்களை வினியோகம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் பெரிய பாத்திரத்தில் இருந்து சோளத்தை எடுத்து வினியோகம் செய்கிறார் அந்த இளைஞர். தனது கையில் இருக்கும் கரண்டி மூலமாக அவர் இசையெழுப்ப அங்கிருந்த அனைவரும் அதனை கேட்டு ரசிக்கின்றனர். சாதாரணமாக சோளத்தை நிரப்புவது போல இருந்தாலும் அவர் எழுப்பும் கலக்கலான இசை அனைவரையும் சற்றே திகைப்படைய செய்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இந்த ஜென்டில்மேன் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெங்களூரில் நடைபெறவிருக்கும் மஹிந்திரா பெர்குஷன் ஃபெஸ்டிவலில் அவர் கெளரவ விருந்தினராக இருக்க வேண்டும். ரிதமும் தாளமும் இந்தியாவின் இதயத் துடிப்பு என்பதற்கு வாழும் ஆதாரம் அவர்" இந்நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
I don’t know which establishment this gentleman works at, but he should be an honoured guest at our upcoming #MahindraPercussionFestival in Bengaluru. 😊 He is living proof that rhythm & percussion is the heartbeat of India! #SundayFeeling pic.twitter.com/B3okr25Wy8
— anand mahindra (@anandmahindra) February 12, 2023
மற்ற செய்திகள்