"இதெல்லாம் இந்தியாவுல தான் நடக்கும்"..லைட், மியூசிக் எல்லாம் ஸ்கூட்டர்ல.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இசையும், பயணமும் பிடிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம். அதனாலேயே கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் மக்கள் இசையுடன் பயணிக்க விருப்பப்படுகின்றனர். இதனிடையே இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது ஸ்கூட்டரையே மினி இசை கச்சேரி கூடமாக மாற்றியிருக்கிறார். விளக்குகள், இசை என பார்க்கவே மிரட்டலாக இருக்கும் இந்த ஸ்கூட்டரின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மின்னும் ஸ்கூட்டர்
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர் சிறிய சிறிய விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. செல்போன் போன்ற திரையில் பாடல்கள் ஓட, அதன் தாளத்திற்கு ஏற்றபடி விளக்குகள் ஒளிர்கின்றன. இந்த வாகனத்தை அங்கிருப்பவர்கள் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த ஸ்கூட்டரை சுற்றி சுற்றி வீடியோ எடுக்கின்றனர்.
இந்த வினோத ஸ்கூட்டரின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"நீங்கள் விரும்பும் அளவுக்கு வாழ்க்கை வண்ணமயமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும்" எனக்குறிப்பிட்டு #OnlyInIndia என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோவை இதுவரையில் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 16,000 பேர் இந்த வீடியோ பதிவை லைக் செய்துள்ளனர்.
Life can be as colourful and entertaining as you want it to be… #OnlyInIndia pic.twitter.com/hAmmfye0Fo
— anand mahindra (@anandmahindra) June 17, 2022
மற்ற செய்திகள்