"ஆஹா, இத பாத்தா அவங்க பொறாமை படுவாங்களே.." படிக்கட்டை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா.. "அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
Also Read | "தல முடி இந்த Colour-ல இருந்தா சினிமா டிக்கெட் Free".. புதுசால்ல இருக்கு? விசேஷ அறிவிப்பின் பிண்ணனி..!
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
மேலும், அவர்களின் திறன் வெளியே தெரிந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்கவும் வழி செய்யும். அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மைக்ரோ பிளாகிங் வகையில், அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு தளம் ஒன்றை தொழிலாளி ஒருவர் அமைத்தது தொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருந்தார்.
இடத்தை மிச்சப்படுத்தும் வகையில், இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைப்படும் நேரம் இல்லாமல், மற்ற நேரத்தில் இந்த படிக்கட்டுகளை மடக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவின் கேப்ஷனில், "சிறப்பானது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு கிரியேட்டிவிட்டி படைப்பு. ஒரு அப்பட்டமான வெளிப்புற சுவற்றிற்கு கவர வைக்கும் அழகியல் சேர்க்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. Scandinavian வடிவமைப்பாளர்களை இது பொறாமை கொள்ள வைக்கும்" என குறிப்பிட்டு, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை, தனக்கு வாட்ஸ் அப்பில் கிடைத்த வீடியோ என்றும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இந்த படிக்கட்டினை உருவாக்கிய நபரை பாராட்டி, நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இடத்தை சேமிக்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இது போன்ற படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது, தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Outstanding. So simple yet creative. Apart from de-cluttering space, this actually adds an attractive aesthetic element to an otherwise stark exterior wall. Should make Scandinavian designers envious!! (Don’t know where this is from. Received in my #whatsappwonderbox ) pic.twitter.com/IBC6RR591y
— anand mahindra (@anandmahindra) July 16, 2022
மற்ற செய்திகள்