"அது உண்மை தான்பா".. மருத்துவர்கள் Hand Writing குறித்து ஆனந்த் மஹிந்திரா ஜாலியாக பகிர்ந்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்நிலையில், மிகவும் ஜாலியான ஒரு விஷயம் தொடர்பான வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
பொதுவாக, மருத்துவரின் கையெழுத்து என்றால், சாதாரணமாக இல்லாமால், மருத்துவம் தொடர்பாக இருக்கும் நபர்களுக்கே புரியும் வகையில் இருக்கும் என ஒரு கூற்று உள்ளது. பார்ப்பதற்கு ஒரு நபரின் கையொப்பம் போல அவை இருக்கும்.
இதனையடுத்து, மருத்துவரின் கையெழுத்து தொடர்பான வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது இருக்கும் ஒரு நபரின் கையெழுத்து, MBBS சேரும் போது எப்படி மாறும் என்பது குறித்து இடம்பெற்றுள்ளது.
Hilarious. But true… pic.twitter.com/b3uoFIIm1R
— anand mahindra (@anandmahindra) September 4, 2022
இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தனது கேப்ஷனில், "வேடிக்கை. ஆனால் உண்மை" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்