"சில நேரங்கள்ல லேட்டஸ்ட் டெக்னாலஜி -லாம் இப்படித்தான் இருக்கும்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

"சில நேரங்கள்ல லேட்டஸ்ட் டெக்னாலஜி -லாம் இப்படித்தான் இருக்கும்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் ட்வீட்..!

பொதுவாகவே இன்று தொழில்நுட்ப சாதனைகளாக இருக்கும் பலவற்றுக்கு அடித்தளம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டிருக்கிறது. இதனை ஒரு நகைச்சுவை படம் மூலமாக மீண்டும் உலகிற்கு நினைவுபடுத்தியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. அடிப்படை கண்டுபிடிப்புகளை தற்காலத்துக்கு ஏற்றபடி மீள் வடிவமைப்பு செய்வதே பல இடங்களில் இருக்கிறது. இதுவே பல சவால்களையும் தோற்றுவிக்கிறது. அந்தவகையில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த படம் பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

 

வைரல் ட்வீட்

ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் இரண்டு பெண்கள் கொடியில் காயும் துணிகளை பார்த்தபடி நிற்கிறார்கள். அவற்றுள் ஒரு பெண்,"மிகவும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்த துணிகள் உலர்கின்றன. சூரிய சக்தி மற்றும் காற்று ஆகியவற்றின் முயற்சியால் இது சாத்தியமாகிறது" என்கிறார்.

இந்த படத்தினை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா,"சில நேரங்களில் புதிதான தொழில்நுட்பம் எனபது நம்முடைய அடிப்படைக்கு திரும்புவதகத்தான் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் இந்த படத்தினை 9 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மேலும்,"டெக்னலாஜி வந்துவிட்ட பின்னர் நாம் நம்முடைய பாரம்பரியத்தை மறந்துவிட்டோம்" எனவும் "உண்மையில் அடிப்படை அறிவே அனைத்தையும் விட சிறந்தது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ANANDMAHINDRA, TWEET, TECHNOLOGY, ஆனந்த்மஹிந்திரா, ட்வீட், தொழில்நுட்பம்

மற்ற செய்திகள்